இலங்கையில் பிறந்தவரும் அமெரிக்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான ராஜ் இராஜரட்ணம் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
நேற்று (28) யாழ். போதனா மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு பங்குச் சந்தையை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ். பி. ஐ. அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவரின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. எனினும், அவர் அந்த வழக்கில் போராடி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார்.
இந்நிலையில், சிறையில் இருந்த காலத்தில், அவர் எழுதிய “Uneven Justice” என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு – ” விளைந்த நீதி”- விரைவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
