உயரத்துடிப்பவர்களை உயர்த்தும் நோக்கில் தமிழ் ஒளியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதவிச் செயற்றிட்டம் இனிதே ஆரம்பமானது.
qமுதலாவது உதவித்திட்டத்தில் சின்னஞ்சிறு பாலகியின் நீண்ட நாள் ஆசையை நாம் நிறைவேற்றி வைத்துள்ளோம்.
கணவனை இழந்து தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளை தன் முதுகிலே சுமந்து அவர்களின் எதிர்கால வாழ்விற்காய் தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண் தலைமைத்துவ குடும்ப பெண்ணால் வைக்கப்பட்ட கோரிக்கையை நாம் நிறைவேற்றி வைத்துள்ளோம்.
மந்துவில் மேற்கு கொடிகாம் J/ 346 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு துவிச்சக்கர வண்டியை ஒன்றினை வழங்கி வைத்துள்ளோம்.
தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி இதுவரை காலமும் நடந்து பாடசாலைக்கு சென்று வந்த நிலையில், அம்மாணவியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ் உதவித்திட்டச் செயற் பாட்டை நாம் முன்னெடுத்தோம்.
இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கனடா teknion form நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது சம்பளத்தில் சிறிதளவு சேமித்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவர் மூலம் தாயக்கதில் உள்ள எம்மக்களுக்கு உதவுவது வழமை அதன் அடிப்படையில் இவ் மாதம் தேசியநாதன் அருணாச்சலம் அவர்கள் தமிழ் ஒளியுடன் இணைந்து இச்சேவையை முன்னெடுத்துள்ளார்.
உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளத்திற்கு உதவி பெற்ற குடும்பத்தின் சார்பிலும், தமிழ் ஒளியின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
