கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட யுவதி இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அறிந்தமையால் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இந்நிலையில், யுவதியின் வீட்டுக்குச் சென்ற காதலன், தாயையும், சகோதரனையும் தாக்கிவிட்டு யுவதியை கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
