யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு சேவையாற்ற கிடைத்ததை பெரும் பாக்கியமாக நினைக்கின்றேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவருக்கு இன்று (30) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றம் ஆகி வருகின்ற மாவட்ட செயலாளர்கள் யாவரும் தற்பெருமையோடும், தன்னம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளனர். எனக்கும் இவ் மூன்றுவருடங்களும் சேவையாற்றகிடைத்தது பல எதிர்பார்ப்புகளையே தந்துள்ளது.
குறிப்பாக எமது பிரதேச செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள், இடர் அனர்த்த முகாவைத்துவம், கொரோனா தொற்று போன்ற காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்கு சென்று அதனை அவதானித்து அதற்கான பரிகாரங்கள், நிவராணங்களை பெற்றுத்தந்தனர்.
எனவே, எதிர்வரும் காலத்திலும் ஔ எனக்கு பணித்து இருக்கும் இளைஞர் விளையாட்டு திறன் அமைச்சுடைய செயலாளர் பதவிற்கு பக்கபலாக இருந்து செயற்படுவேன்” என்றார்.
