யாழ்.மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக றூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளாயாகியுள்ளன. இந்நிலையில், அவரை யாழ்.மாவட்ட அரச அதிபராக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்து இன்று (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்வுள்ளார். இந்நிலையில் புதிய அரச அதிபராக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரை யாழ். மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலக முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“தமிழர் வாழ்வியலில் வாழ்பவரே எமக்கு அரச அதிபராக வர வேண்டும்” , “தமிழ் மண்ணில் மதமாற்றம் திட்டமிட்ட இனவழிப்பே”, “இந்துக்கள் பெரும்பாண்மையான மாவட்டத்தில் மதமாற்றிகளை ஆள வைப்பது ஏன்?”, “நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போல் இங்கும் தமிழரை மதம் மாற்றி இனமாற்றம் செய்வது யாருடைய திட்டம்” போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இப்போராட்டத்தில் சிவசேனை அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர்.
