காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
“ராஜபக்ச குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம்”, “நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே”, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்”, “ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுறுத் தா”, “வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு”, “கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே” போன்ற கோசங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
