கடலட்டை தொழிலை மேற்க்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யாழில் மீனவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (30) முன்னெடுத்திருந்தனர்.
எங்கள் கடலில் பண்ணை நாங்கள் செய்கின்றோம் – அட்டை பண்ணை எஙகளுக்கு வேண்டும் எனற கோரிக்கையோடு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
“கடற்தொழிலாளர் முன்னேற்றத்தை தடுக்கதே”, “வெந்து தணிந்தது காடு கடலட்டை பண்ணைக்கு Addmisson அ போடு”, “பதனிடும் நிறுவனத்தின் அங்குராப்பண நிகழ்வில் சோறு தின்ன சென்றனரா ” அன்ன ராசாக்கள்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது யாழ்.கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்று அங்கிருந்து பலாலி வீதியூடாக கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில், கடற்தொழில் சங்கங்கள் , கடலட்டை பண்ணை செய்யும் தொழிலாளிகள், கடலட்டை பண்ணைக்கு கோரிக்கை வைத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
