துருக்கி நாட்டின் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஹொட்டல் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் தப்பினனர்.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்னர்.
