ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அண்மையில் ஒலிப்பதிவு ஒன்று எடுப்பதற்காக ஸ்டூடியோ ஒன்றுக்குச் சென்றுள்ள நிலையில் நீண்ட நேரமாகியுள்ளது. எனவே, அவர் வாகனத்தில் வீட்டுக்கு சென்ற போது கடும் நித்திரை காரணமாக வீதியோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்துக்குள் நித்திரை செய்துள்ளார். இந்நிலையில் பொலிஸ் அதிகாரியொருவர் வாகன கண்ணாடியை தட்டி ”இந்தப் பக்கம் வாகனம் நிறுத்தத் தடை” என கூறியபோது பொலிஸ் அதிகாரியிடம் தன்னை யார் என்று அறிமுகப்படுத்தி நடந்ததைச் தெரிவித்துள்ளார்.
