எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை பாராளுமன்ற விடுமுறைக் காலம் நீடிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, 5 ஆம் திகதியே பாராளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
