சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
நேற்று (30) இரவு நாவற்குளியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் குழு மது அருந்தி உள்ளனர்.
இந்நிலையில், இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில், முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவர் மற்றைய குழுவைச் சேர்ந்த ஒருவரின் தலையை போத்தலால் அடித்து மண்டையை பிளந்துள்ளார்.
தொடர்ந்து இரண்டு குழுக்களும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு குழுக்களையும் சேர்ந்த ஒவ்வொருவர் காயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
