நாய் கூட மணந்துவிட்டு சாப்பிடாமல் செல்லும் உணவை சிறுவர்களுக்கு எந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளீர்கள் என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீன அரசாங்கத்தால் தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு பொதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த பொதுமகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் அதிகாரிகள் இருக்கின்றார்களா? இல்லையா என யோசிக்க தோன்றுகின்றது.
சீன அதிகாரிகள் உங்கள் அனுமதி இல்லாமலா பாடசாலைகளுக்கு உணவு பொதிகளை வழங்கியுள்ளார்கள்.
ஒரு உணவுப்பொதி வழங்குவதென்றால் அது பாவனைக்கு உகந்ததா? என அதன் தரத்தை சோதித்து மக்களுக்கு வழங்க வேண்டும்.
சீன அரசாங்கம் வழங்கிய அரிசியை சமைத்த பின்னர் அது றபர் களி போல இழுபடுகின்றது. அதை உட்கொண்ட மாணவர்கள் வயிற்று பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
