கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை வீடு புகுந்து குறித்த இளைஞனை கத்தியால் குத்தியும், அடித்தும் தாக்குதல் மேற்க்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த இளைஞனை மீட்ட உறவினர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், இடைநடுவில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
