சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக இரண்டு தமிழ் பொலிஸார் வன்புணர்விற்கு உள்ளாக்கி வந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் பருத்தித்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், குறித்த சிறுமிக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து இரண்டு பொலிஸார் அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இரண்டு பொலிஸாரும் ஆட்கள் இல்லாத வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்ந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வன்புணர்ந்த போது எடுத்த காணொளியை வைத்து மிரட்டியே இரண்டு பொலிஸாரும் சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 19 வயதாகின்ற யுவதி கடந்த வியாழக்கிழமை தீடிரென மயங்கி வீழ்ந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
யுவதியிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நடந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காணொளி மாணவர்களுக்கு குறித்த பொலிஸாரால் வழங்கப்பட்ட நிலையில் அவர்களும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்க்கொள்ள முற்பட்டதாக யுவதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் துரித விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
