80 கோடி ரூபா பட்ஜெட்டில் தயாராகியுள்ள வாரிசு திரைப்படத்திற்கு ராஷ்மிகா நாயகியாக நடிக்க பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்துள்ளார்.
இவரை தவிர ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, சம்யுக்தா என ஏகப்பட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த டிசம்பர் 24ம் திகதி இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியாக இருக்கிறது, அதற்கான வேலைகளில் படக்குழு உள்ளனர்.
தற்போது என்ன விவரம் என்றால் இப்படத்தின் ரெய்லர் வரும் ஜனவரி 2ம் தேதி வெளியாக உள்ளது.
