திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் உருவப்படத்திற்கும் சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
