மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் முதியவரே சிறுமியுடன் அத்துமீற முற்பட்டுள்ளார். கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சிறுமியை பலவந்தமாக கடைக்குள் தள்ளி பாலயல் துஷ்பிரயோகம் மேற்க்கொள்ள முதியவர் முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி அவலக்குரல் எழுப்பியுள்ளார். இதன்போது வீதியால் பயணித்த இளைஞர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது முதியவர் அந்தரங்க நிலையில் நின்றுள்ளார்.
முதியவரை அடித்து துவைத்த இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
