ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி என்றும் தெரிய வருகிறது.
