யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 7 யுவதிகள் போதைப் பொருட்களை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்காக பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தவறான காதல் மூலமே இந்த யுவதிகள் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக போதைப் பொருளை பெறுவதற்காக தவறான நபர்களுடன் அறிமுகமாகி பாலியல் தொழில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்களுக்கே இவர்கள் அடிமையாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 7 யுவதிகளும் 21 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட யுவதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
