வடமராட்சி வத்திராயன் பகுதியில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், நாய் இழுத்துச் சென்றமையால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்துயரச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது. நாய் ஒன்று சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்வதை அவதானித்த மக்கள் அதனை மீட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சிசு புதைக்கப்பட்ட இடம் மக்களால் அடையாளம் காணப்பட்டது.
வீடொன்றின் பின்பகுதியிலேயே குறித்த சிசுவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வீட்டின் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
