கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தியது.
இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குடும்ப அட்டைக்கு தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்த வருடம் டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நீடிப்பு டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்து, நேற்று முதல் புதிய நீடிப்பு அமுலுக்கு வந்தது.
