மேடம் – உங்கள் செயல் திறனால் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உற்சாகமான நாள்.
இடபம் – திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
மிதுனம் – பழைய பிரச்னை ஒன்று மீண்டும் பெரிதாகும். நண்பர்கள் உதவுவார்கள். திட்டமிட்ட செயலிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும்.
கடகம் – நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத வரவால் நிதி நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சி லாபமாகும்.
சிம்மம் – எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.
கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி – குடும்பத்தினர் நலனில் கவனம் செலுத்துவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். பிள்ளைகள் செயல்களால் சங்கடத்திற்குள் ஆளாவீர்கள். மனதில் குழப்பம் உண்டாகும்.
துலாம் – உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். வெளியூர் பயணங்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள். செயலில் குழப்பம் ஏற்படும்.
விருச்சிகம் – தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும்.
தனுசு – நண்பரின் அவசரம் அறிந்து உதவி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்கள்.
மகரம் – தடைபட்ட செயலை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கும்பம் – எதிர்பாராத பயணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
தடைபட்ட ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். இலாபநிலை உண்டாகும்.
மீனம் – துணிச்சலுடன் ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
உங்கள் பேச்சுக்கு வெளியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
