நாட்டில் அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 20 வீதம் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
