யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் 19 வயதுடைய மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
புதுவருட தினத்தில் (01) இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மாணவி இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலன் ஏமாற்றியதாலேயே உயிர்மாய்த்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
