நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் போராட்டம் வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நியாயமற்ற வரி அறவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
