வருடம் தோறும் இடம்பெறும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு இன்று (03) இடம்பெறுகிறது.
அந்தவகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியானது ராஷ்டிரசந்த் துகாடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலை கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இடம்பெறுகிறது.
