முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்.
600 ஆண்டுகால வரலாற்றில் பதவி விலகிய ஒரே போப் ஆண்டவரான இவர் அண்மை காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வாடிகனில் அவர் உயிரிழந்தார்.
முன்னாள் போப் ஆண்டவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உள்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக்டின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
