சூர்யா இப்போது ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
சென்னை, கோவா ஆகிய இடங்களைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் மீண்டும் சென்னை எண்ணூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் ‘சிறுத்தை’ சிவா, முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் ‘சூர்யா-42’ படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பைத் தூண்டி வருகிறது.
சூர்யா, திஷா பதானி, யோகி பாபு எனப் பலரும் நடித்து வருகின்றனர். இந்தக் கதை குறித்து தெரிவிக்கப்படுவது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கதை அவருக்குத் தோன்றிவிட்டது. ஆனால், அதை படமாக்கினால் அதற்கான வியாபாரம் சாத்தியமா என எண்ணியதால், அப்போது இந்தக் கதையை அவர் தொடாமல் இருந்தார். ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ போன்ற பிரமாண்ட படங்கள் கொடுத்த நம்பிக்கையில் அந்த கதையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.
ஆனால் மொத்த ரீமும் வியந்து சொல்லும் ஒரு விஷயம், ‘சூர்யாவின் உழைப்பு தான். அசுரத்தனமாக உழைக்கிறார். மிரள வைக்கிறார் சூர்யா” என்கிறார்கள்.
