உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை திட்டம் ஒன்றும் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம். பி. தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்தே இந்த தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு அரசாங்கம் இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிப்போம் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
