பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதேசமயம், 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களும் நியமிக்கப்படுவர் என்று அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார். ஆனால், இதுவிடயத்தில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
