உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகளை திருத்துவது தொடர்பான அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இதனால், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கடும் வாக்கு வாதம் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை அரசாங்கம் இந்த தேர்தலை தாமதப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியல்லவும் எதிர்ப்பினை வெளியிட்டார்.
