எதிர்வரும் உள்ளூராட்சி
சபைத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், சந்திரிகா தலைமையிலான அணி ஒன்றும்
இணைந்து களமிறங்கவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இருவரும்
விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று அறிய வருகின்றது.
மொட்டுக் கட்சியில்
இருந்து விலகி சுயாதீனமாகச்
செயற்படும் அநுர பிரியதர்சன
யாப்பா – சந்திம வீரக்கொடி
உள்ளிட்ட அணியினர் சந்திரிகாவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
