உமி மூடைக்குள் மறைத்து பேருந்தில் கசிப்பு கொண்டு வந்த மூவர் யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் வைத்து பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக் கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
