இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட சுமார் 60 மாகாண வைத்தியசாலைகளுக்கு இந்த தோடம்பழங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
3 கொள்கலன்களில் உள்ள தோடம் பழங்களின் மொத்த பெறுமதி 72 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
