சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதிலளிப்போம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இராணுவம் பதில் கூறியுள்ளது.
சரணடைந்த புலிகளுக்கு என்ன நடந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
1111/2022 என்ற இலக்கத்தை கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்த்தன தலைமையில் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தது.
மேலும், “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இதன்போது இராணுவம் தெரிவித்துள்ளது.
