ஊரெழு றோயல் வி.கழகம் நடத்திவரும் “வடக்கின் சமரில்” லீக் சுற்றுப்போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
அவ்வகையில், நாளை (07) முதலாவது போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் வி.கழகத்தை எதிர்த்து ஆனைக்கோட்டை கலையொளி வி.கழகம் மோதவுள்ளது.
இரண்டாவது போட்டியில், இளவாலை ஹென்றிஸ் வி.கழகத்தை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் வி.கழகம் மோதவுள்ளது.
குறித்த போட்டிகள் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாவதுடன், போட்டிகள் யாவும் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளுக்கு தமிழ் ஒளி இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
