மின்சார கட்டணத்தை உயர்த்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை. இதனை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நிராகரிக்கும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமை மின்சார அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட பிரேரணை. தவறான தரவுகளின் அடிப்படையில் அந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
