யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் புதிய முதல்வர் தெரிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியாகியுள்ளது.
யாழ்.மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்த நிலையில் மாழ்.மாநகர முதல்வராக இருந்த மணிவண்ணன் பதவியை இராஜினாமா செய்து இருந்தார்.
இந்நிலையில், மாநகரசபை கலையுமா? அல்லது புதிய முதல்வர் தெரிவு இடம்பெறுமா? என சிக்கலான தன்மை நீடித்து வந்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசணையும் கோரப்பட்டது.
இந்நிலையில், யாழ்.மாநகரசபைக்கு புதிய முதல்வர் தெரிவு இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
