இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இன்று (07) காலை மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தமிழரசுகட்சியின் கொடி ஏற்றலுடன் தலைவர் மாவை.சோ.சேனராதிராசா தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
இக்கூட்டத்தில், தமிழரசுகட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
