உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இன்று (07) இடம்பெற்ற தமிழரசு கட்சி மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழரசு கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என்றே வலியுறுத்தினர்.
உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு, ஆட்சி அமைக்கும் போது கூட்டமைப்பாக இணையலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், கட்சித்தலைவர் மாவை மற்றும் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் இம்முடிவை எதிர்த்தனர். தேர்தல் வாக்குகளுக்காக பார்க்காது இனநலனைப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைத்தனர்.
ஆயினும், பெரும்பாலான உறுப்பினர்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், இம்முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
