மாஸ் காட்டியது சென்.மேரிஸ் சளைக்காது கெத்து காட்டியது சென்.லூட்ஸ்
யாழ்.லீக்கின் அனுசரணையுடன் டான் ரீவி. நடத்திவரும் புதிய விடியல் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டம் இன்று (08) இடம்பெற்றது.
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் நவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து இளவாலை சென்லூட்ஸ் வி.கழகம் மோதியது.
போட்டியின் முதற்பாதியில் இரண்டு அணிகளும் மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல்பாதியாட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டாவது பாதியட்டத்தில் தமது வழமையான வேகமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேரிஸ் இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் முதலாவது கோலினைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், தொடர்ந்த ஆட்டத்தில் சென்லூட்ஸ்சும் அதிரடி காட்ட சென்.மேரிஸ் அனல் பறந்த ஆட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தளித்து.
போட்டி நிறைவடைவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் சென்.மேரிஸ் இரண்டாவது கோலினையும் பெற்றுக்கொண்டது. இறுதியில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு சென்.மேரிஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் யாழ்.மண்ணின் உதைபந்தாட்டத்தின் தலைசிறந்த அணிகளான நாவந்துறை சென்மேரிஸ் வி.கழகமும் நாவந்துறை சென்.நீக்கிலஸ் வி.கழகமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
