சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில், வாள்வெட்டுக் கும்பலால் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுச் சம்பவம் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்களே குறித்த வாள்வெட்டுத்தாக்குதலை மேற்க்கொண்டுள்ளனர். ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
