யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள காணியொன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடமென சந்தேகிக்கப்படும் இடத்தினை தோண்டும் நடவடிக்கை நாளை (09) முன்னெடுக்கப்படவுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டே குறித்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவுள்ளது.
கொக்குவில் – பொற்பதி வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றிலேயே குறித்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
