மேடம் – பயணங்களால் அலைச்சல் உண்டாகும் என்றாலும் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் திறமை வெளிப்படும்.
இடபம் – பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவினர் ஒருவர் வீடு தேடி வருவார். உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
மிதுனம் – உற்சாகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
கடகம் – கவனக்குறைவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். நிதானம் அவசியம். வேலை பளு அதிகரிக்கும். அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் கவனம் தேவை.
சிம்மம் – பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. வேறு சிந்தனை வேண்டாம். விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்க முடியும். நட்பு வட்டம் விரியும்.
கன்னி – நீங்கள் எதிர்பார்த்த வருமானம் இன்று வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். முன்பு செய்த முதலீடு ஒன்றில் இருந்து எதிர்பாராத லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
துலாம் – வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும் நாள்.
விருச்சிகம் – உங்கள் திறமையால் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வார்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு – முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படும். பகைவர்களால் நெருக்கடி தோன்றும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போவார்கள்.
மகரம் – புதிய நண்பர் ஒருவரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
கும்பம் – மறைமுகமாக தொல்லை கொடுத்து வந்தவர்களை கண்டறிந்து விலக்குவீர்கள். பகைவரால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும்.
மீனம் – உறவினர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
பணி புரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
