மேடம் – சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி ஒன்று லாபம் தரும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
இடபம் – துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். உங்கள் செயல்களில் சில சங்கடத்தை சந்திக்க வேண்டி வரும். கவனம் அவசியம்.
மிதுனம் – நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். காலையில் ஒரு முயற்சி நிறைவேறும்.
சகோதரர்கள் வழியில் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு லாபம் தரும்.
கடகம் – காலையில் உங்கள் செயல் இழுபறியானாலும் முயற்சி பலிதமாகும். நேற்று இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.
சிம்மம் – பொருளாதார நெருக்கடி அகலும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செலவு கட்டுக்குள் அடங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
கன்னி – அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். உங்கள் முயற்சி இழுபறியாகும். அரசு வழியில் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுங்கள்.
துலாம் – எதிர்பார்த்த பணம் இன்று வரும். நிதிநிலை உயரும் நாள். மகிழ்ச்சியான நாள்.
வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வான நிலை விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
விருச்சிகம் – வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சியில் இலாபம் காண்பீர்கள்.
தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை அடைவீர்கள்.
தனுசு – நேற்று இருந்த நெருக்கடி விலகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.காலையில் குழப்பம் ஏற்படும். இருந்தாலும் தெளிவுடன் செயல்படுவீர்கள்.
மகரம் – இன்று உங்கள் செயலை மகிழ்ச்சியுடன் தொடங்குவீர்கள். நன்மை அதிகரிக்கும் நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.
கும்பம் – துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.
மீனம் – எதிர்ப்பு விலகும், வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும் நாள். தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வீர். மனதில் நம்பிக்கை உண்டாகும் நாள்.
