உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புத்தளம் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (09) செலுத்தியது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இராஜாங்ஜ அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் தேர்தலில் களமிரங்கவிருக்கும் வேட்பாளர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதன்போது புத்தளம் மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி சபைக்கான கட்டுப்பணத்தையும் இன்று செலுத்தியதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செலுத்தியது.
