தனியார் வகுப்புக்குச் சென்ற 10 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்று (08) பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஹொரவாபொத்தனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியரால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை சிறுமியால் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், பெற்றோர் இது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளவில்லை. இந்நிலையிலேயே குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளனர்.
