பொன்னாலைப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கி.கிருசாந்தன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பல மாதங்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
