தொண்டமனாறு – செல்வச்சந்நிதிக்கு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் முதியவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த மக்களால் சடலம் அவதானிக்கப்பட்ட நிலையில், பருத்தித்திறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு வந்த முதியவர் கால் கழுவ முற்பட்ட வேளையில் தவறுதலாக கடலினுள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிகமான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
