மேடம் – வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மனதில் நினைத்ததை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
இடபம் – நீண்ட நாட்களாக தள்ளி வைத்து வந்த வேலையில் இன்று கவனம் செலுத்துவீர்கள்.
அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். செயல்களில் லாபம் உண்டாகும்.
மிதுனம் – நேற்று மேற்கொண்ட ஒரு முயற்சி இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்தி ஒன்று வந்து சேரும். சகோதரர்கள் வழியில் நன்மை உண்டு.
கடகம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். நன்மை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
சிம்மம் – தொழில் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் குழப்பம் தோன்றும்.
கன்னி – குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். உங்களது எதிர்பார்ப்பு இழுபறியாகும். யோசித்து செயல்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடப்படுவீர்கள். நிதானம் காப்பது அவசியம்.
துலாம் – நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வராமல் இருந்த ஒரு தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம் – வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்காலம் குறித்த எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.
தனுசு – குடும்பத்திற்குள் உண்டான குழப்பம் விலகும். தந்தையின் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
மகரம் – செயலில் கவனம் தேவை. அமைதி காப்பது நன்மையாகும். முயற்சிகள் இழுபறியாகும். சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
கும்பம் – உங்கள் திறமை வெளிப்படும். அக்கம் பக்கத்தினர் பாராட்டுவார்கள். வருமானம் கூடும். உங்களைத் தேடி முக்கிய பொறுப்புகள் வரும். உங்கள் பலத்தை நீங்கள் அறிவீர்கள்.
மீனம் – எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்பநிலை உயரும். எதிர்ப்பு விலகும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.
